மத்தி மீன் குழம்பு செய்முறை

மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி

மத்தி மீன் குழம்பில் எண்ணெய் சேர்க்கலாமா?

மத்தி மீன் அல்லது சாளை மீன் என அழைக்கப்படும் மீனானது மீன் எண்ணெய் எடுக்கப் பயன்படும் மீனாகும். இந்த மீன் அதிக அளவில் கடற்பாசிகளை உணவாக உண்டு வாழும் என்பதனால் இதன் உடலில் இயற்கையாகவே மனிதர்களின் உடல் நலனிற்கு தேவையான எண்ணெய் தன்மை இருக்கும். 

மத்தி மீன் குழம்பில் வேறு தாவர எண்ணெய்யை கலந்துவிட்டால் மீன் எண்ணெய்யின் தன்மை மாறிவிடும் என்பதனால் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பதே உடல் நலனிற்கு நல்லது. வாங்க எண்ணெய் சேர்க்காமல் மீன் குழம்பு செய்வது எப்படியென பார்க்கலாம்.

எளிமையான மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள்

மத்தி மீன் (சாளை மீன்) – 1/2 கிலோ
புளி – ஒரு எலுமிச்சை உருண்டை அளவில்
சின்னவெங்காயம் – 10
தேங்காய் – 1/2 மூடி
சின்னசீரகம் – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் – தேவைக்கேற்ப
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 4 குவளை

எளிமையான மத்தி மீன் குழம்பு செய்முறை

முதலில் 1 குவளை நீரில் புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் தேங்காய் துருவலுடன் சின்னசீரகம் மற்றும் சின்னவெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்த தேங்காய் மசியலை மண் சட்டியில் போட்டு, மஞ்சள்த்தூள், மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றுடன் சேர்த்து புளி கரைசலையும் ஊற்றி நன்றாக கலக்கவும். நன்றாக கரைத்த பின்பு வெட்டி வைத்துள்ள மத்தி மீன், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மூன்று குவளை தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

மிதமான வெப்பத்தில் குழம்பு நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை குறைத்து குழம்பை வற்ற விட வேண்டும். குழம்பு நன்றாக வற்றி குழம்பில் மீன் எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையும் மணமுள்ள அருமையான மத்தி மீன் குழம்பு தயார்.

புளியில்லாத மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள்

மத்தி மீன் (சாளை மீன்) – 1/2 கிலோ
சின்னவெங்காயம் – 15
தேங்காய் – 1/2 மூடி
சின்னசீரகம் – தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் – தேவைக்கேற்ப
மிளகு – 10
மல்லித்தூள் – 4 தேக்கரண்டி
தக்காளி – 4
பச்சைமிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 4 குவளை

புளியில்லாத மீன் குழம்பு செய்முறை

முதலில் வடைசட்டியில் சிறிது கடலை எண்ணெய்யை ஊற்றி சின்னவெங்காயம், மிளகு, மிளகாய், தக்காளி மற்றும் சின்ன சீரகம் மூன்றையும் வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். சூடு குறைத்த பின் தேங்காய் துருவலுடன் வதக்கி வைத்த சின்னசீரகம், மிளகு, மிளகாய், தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்த தேங்காய் மசியலை மண் சட்டியில் போட்டு, மஞ்சள்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து  நன்றாக கலக்கவும். அதனுடன் மூன்று குவளை தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

மிதமான வெப்பத்தில் குழம்பு நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை குறைத்து, வெட்டி வைத்துள்ள மத்தி மீனை குழம்பில் போட்டு அப்படியே வற்ற விட வேண்டும். மீனை குழம்பில் போட்ட பின்பு எக்காரணம் கொண்டும் கரண்டியை வைத்து குழம்பை கலக்கக்கூடாது. மீறி கலக்கினால் மீன்கள் உடைந்து குழம்பில் கரையத்தொடங்கிவிடும். குழம்பு நன்றாக வற்றி குழம்பில் மீன் எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் தேவைக்கு ஏற்ப உப்பு காரம் சேர்த்து இறக்கினால் சுவையும் மணமுள்ள அருமையான மத்தி மீன் குழம்பு தயார்.

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.