மெய்யியல்

ஒரு தனிமனிதனின் எதிர்காலத்தை குறித்து கண்டறியும் கணிய கலையை இன்று பரவலாக ஜோதிடம், சாதகம் என பல பெயர்களில் அழைத்து வருகிறோம். ஜோதிடம் / சாதகம் என்றால் என்ன பொருள்? இந்த கலையை கண்டறிந்தது யார்? எப்போது கண்டறிந்தனர்?

இது உண்மையில் அறிவியல் அடிப்படையில் உருவான கலையா? ஏன் இக்கலையை மூட நம்பிக்கை என பலர் பரப்புரை செய்தாலும் ஏன் மக்களிடம் கணியக்கலையின் மீது நம்பிக்கை குறையாமலிருக்க என்ன காரணம்?

இப்படிபட்ட பல வினாக்களுக்கு தெளிவான விடையளிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட காணொளிகளை கண்டு பயன்பெறுங்கள்.

தமிழர் விளையாட்டு

ஒருவருடயை தனித்திறமையை கண்டறிய நம் முன்னோரால் வடிவமைக்கப்பட்ட ஓர் அரிய கலை. கால ஓட்டத்தின் வேகத்தில் அத்தகைய அரிய கலையை நாம் இழந்து வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. பெருமை மிக்க இந்த அரிய கலையை இழந்துவிடக்கூடாது என்று உறுதியேற்று கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி பரப்பி வருகின்றது கணையாளி குழு.

நூற்றிற்கும் அதிகமான விளையாட்டுகளை தொகுத்து பதிவேற்றியுள்ளோம்.

ஒரே ஒரு முறை கணையாளி விளையாட்டுகளை விளையாடிப்பாருங்கள் உங்கள் வாழ்வையே அது மாற்றிக்காட்டும்.

இசை கருவிகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் பயன்படுத்திய இசை கருவிகளை மீட்டு பயிற்சியளித்து வரும் கோசை நகரான் இசை குழுவின் தலைவர் திரு சிவக்குமார் அவர்கள் ஒவ்வொரு இசை கருவிகளின் வரலாற்று குறிப்புகள், பயன் மற்றும் எப்படி வாசிப்பது என்ற தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு இசை கருவியும் அவற்றின் ஒலிக்கேற்ப தனித்தன்மை வாய்ந்தது என்பதை இவ்விழியத் தொகுப்பை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

காற்று, நரம்பு, தோல் மற்றும் கஞ்ச கருவிகள் என பலவகையான கருவிகள் உள்ளது பார்த்து பயன்பெறுங்கள்.

பதிவுகள்

கரூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் (Equitas Gurukul Matriculation School) ஒரு நாள் நிகழ்வாக கணையாளி விளையாட்டு பயிற்சி

தொடர்ந்து படிக்க »

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 15-05-2018 முதல் 22-05-2018 வரை அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இலவயமாக

தொடர்ந்து படிக்க »

08-05-2018 அன்று அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர்களுக்கு கணையாளி விளையாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. விளையாட்டுகளின் வழியாக கல்வி வழங்க

தொடர்ந்து படிக்க »

21-04-2018 மற்றும் 22-04-2018 இரண்டு நாட்கள் கரூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் (Star Matric Hr Sec School)

தொடர்ந்து படிக்க »
Close Menu
×

Cart