நவரை-Red Mullet

நவரை / நகரை (Red Mullet)

நவரையின் வேறு பெயர்கள்

நவரை தமிழில் நவரை (navarai fish) மற்றும் நகரை (nagarai fish) என அழக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Red Mullet மற்றும் Goat Fish என்றும் அழைக்கப்படுகிறது.

நவரை மீனின் வகைகள்

நவரையில் ஏறக்குறைய 50 வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. வரிநவரை, கல் நவரை, கண் நவரை, செந்நவரை, வெண்நவரை, ரோமியா நவரை, நவரை, நகரை, நாக்கு மீன், புள்ளி நாக்குமீன், நாக்கண்டம், நெடு நாக்கண்டம், பாரி நாக்கண்டம், நாறல், நீற்றுக்கவலை, நுணலை (கொய்மீன்), நெடுமீன், நெய்மீன், நெடும்புலி, நெத்தி (பயிந்தி இனம், முள் குத்தினால் கடுகடுக்கும்) மற்றும் நெத்தி பிரியன் என்ற பிரிவுகள் உள்ளது.

நவரை மீனின் வாழ்விடம்

பார்க்கடல் அருகே காணப்படும் சகதி மீனாகும் நவரை. இதில் சில வகைகள் கூட்டமாக வாழக்கூடியது, சில வகைகள் தனித்து வாழக்கூடியது. நவரையில் 6 அங்குலம் முதல் ஓரடிக்கும் அதிக நீளமாக வளரக்கூடிய மீன்களும் உள்ளது. 

நவரை மீனின் உடல் அமைப்பு

நவரையில் செந்நவரையின் உடல் செந்நிறமாகவும், இருபுறமும் மஞ்சள் கலந்து 2 வரிசையில் நீலப்புள்ளிகளுடனும் காணப்படும். மஞ்சள் நவரை, வெள்ளை அல்லது வெள்ளி நிறமானது. இதன் மூக்கில் தொடங்கி கண்வழியாக உடல் முழுவதும் மஞ்சள் நிற கோடு ஓடும்.  நவரையில் புள்ளி நவரை இளஞ்சிவப்பு வண்ணத்தில் உடலின் பக்கவாட்டில் அழுத்தமான 3 திட்டுகளுடன் காணப்படும். நவரையின் பல இனங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும், மீன் வியப்படையும் போது நவரை சிவப்பாகக்கூட மாறும். அடர்த்தியான அழுத்தமான புள்ளிகள் கொண்ட ஒரு நவரை, திடீரென உடலில் கோடுகளோ, புள்ளிகளோ இன்றி வெறுமையாகக் காட்சியளிக்கவும் வாய்ப்புள்ளது. நவரை முதுகின் முன் தூவிகளில் முட்கள் இருக்கும். முதுகு பின்தூவி முட்களற்று மென்மையானது. இரு தூவிகளுக்கும் இடையே இடைவெளி உண்டு.

இதன் தாடைக்குக் கீழே நீளமான தாடி போன்ற இரண்டு உறுப்புகள் இருக்கும். மீனின் முன்புறமோ, அல்லது கீழ்ப்புறமாகவே நவரையால் இந்த உறுப்புகளை நீட்ட முடியும். கடலடியில் உள்ள சகதியைக் கிளறி இரையை தேட இந்த தாடி பயன்படுகிறது. இந்த ஆட்டுத்தாடி காரணமாக நவரை மீன் ஆங்கிலத்தில் கோட் பிஷ் (Goat Fish) எனவும் அழைக்கப்படுகிறது. தாடியை வைத்து நவரையை எளிதாக அடையாளம் காணலாம். தேவையில்லாதபோது இந்த தாடி நவரையின் அடிப்புற உடலோடு ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது இந்தத்தாடியை காண்பது கடினம்.

நவரை மீனை உண்ணும் முறைகள்

நவரை என்றாலே குழம்பு மற்றும் பொறிப்பு இரண்டிற்குமே சுவையான மீன் என்று கூறப்பட்டாலும், தமிழகத்தின் கடற்கரை கிராமங்களில் வைக்கும் குடிமிளகு மீன் குழம்பில் நவரை மற்ற மீன்களை கொண்டு வைக்கப்படும் குடிமிளகு மீன் குழம்புகளையெல்லாம் ஓரம் கட்டிவிடும் என்றால் அது மிகையாகாது. அதனால் தான் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முதல் 41 நாட்கள் வைத்துக்கொடுக்கும் குடிமிளகு மீன் குழம்பில் பாதி நாட்கள் நவரை உறுதியாக மிதக்கும். குடிமிளகு மீன் குழம்பு தாய்மார்களுக்கும், தாய்ப்பாலின் வழியாக குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடியதாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க நவரை மீன்கள் இயல்பாக வைக்கப்படும் புளிக்கரைசல் மீன் குழம்புக்கும், மீன் வறுவலுக்கும் ஏற்றதாகவும் சுவையாகவும் இருக்கும். நவரை மீன்களை வறுக்கும் முன் அதன் உடற்பகுதில் கத்தியால் மெலிதாய் கீறிவிட்டால் உப்புக்காரம் நன்றாக சேர்ந்து அருமையான சுவையுடன் இருக்கும். பாரை மீன்களைப் போல தோல் அழுத்தமாய் இருக்கும் மீன்களுக்கு தோலை கீறிவிட வேண்டும், மிருதுவான தோலை கொண்டிருக்கும் நகரைக்கு கீறல் தேவை இல்லை. எனினும் வறுத்த பின் அந்த கோடுகளை பார்த்தால் உடனே சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும் காரணத்தினால் கீறி விடுவது நல்லது. சதைப்பகுதியில் சில முட்கள் இருந்தாலும் முள்ளில் இருந்து எளிதாக சதைப்பகுதியை பிரித்தெடுக்க முடியும். வறுத்த நகரை துண்டுகள் நான்கு இருந்தால், இரசத்திற்கே தட்டுத்தட்டாய் சோறு இறங்கும்.

 

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.