காரல் மீன் - Pony Fish

காரல் மீன் – Pony Fish

காரல் மீனின் வேறு பெயர்கள்

காரல் என பொதுவாக அழைக்கப்படும் இந்த மீன் வகையானது உருவத்தில் மிகச் சிறியதாக உள்ளதால் பொடி மீன் மற்றும் காரப்பொடி மீன் என்றும் அழைக்கப்படுகிறது. சிலர் பூச்சி மீன் என்றும் அழைப்பதுண்டு. மலையாள நாட்டில் இதை முள்ளான் எனவும் ஆங்கிலத்தில் \”Pony fish\” எனவும் அழைக்கப்படுகின்றது. முகம் மட்டக்குதிரையின் (Pony) முகம் போல் இருப்பதால் அவ்வாறு பெயர் வழங்கப்பட்டுள்ளது. சிலர் இதை Silver belly fish என்றும் அழைப்பதுண்டு.

காரல் மீனின் வகைகள்

காரல்களில் 9 இனங்களும், 48 வகைகளும் உள்ளதாக கூறப்படுகிறது:

அப்புக்காரல், அமுக்குக்காரல், கலி காரல், பொட்டுக்காரல், நெடுங்காரல் (விளக்கு), மஞ்சள் காரல், மரவுக்காரல், வரிக்காரல், வரவுக்காரல், உருவக்காரல் (குதிப்புக் காரல்), ஊசிக்காரல், ஒருவாக் காரல், பெருமுட்டிக் காரல், கவுட்டைக் காரல், நெய்க்காரல், வட்டக்காரல், கண்ணாடிக் காரல், குழிக்காரல், குல்லிக்காரல், ஓட்டுக்காரல், செவிட்டுக் காரல், சென்னிக்காரல், காணாக்காரல், காணா வரிக்காரல் (வரிக்காரலில் சிறியது), பெருவா காரல், காசிக்காரல், சுதும்பு காரல், சலப்பக் காரல், சலப்ப முள்ளுக்காரல், சளுவக் காரல், சலப்பட்டக் காரல், சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்), பஞ்சக் காரல், தீவட்டிக் காரல், கொம்புக் காரல், நாமக் காரல், பொடிக்காரல் (பூச்சிக் காரல்), பூட்டுக்காரல், முள்ளங்காரல், சுதுப்புனங் காரல், பெருவா காரல், கொடுங்காரல் என மொத்தம் 42 காரல் பெயர்களை தமிழர்கள் வகைபடுத்தியுள்ளனர்.

காரல் மீனின் சிறப்பியல்புகள்

காரல்களில் ஒளிரும் காரல்களும் உள்ளன. உணவுக்குழாய்களில் உள்ள ஒருவகை பாக்டீரியாவின் காரணமாக காரல்கள் இரவில் ஒளிர்கின்றன. காரல்மீன்களில் மிகப்பெரிய மீனாக பெருமுட்டிக் காரலைக் கூறலாம். இந்த வகை மீன், 8 அங்குலம் முதல் 11 அங்குலம் வரை வளரக்கூடியது. இவற்றின் வெளிப்புறத்தில் செதில் இல்லாமல் உப்புப்படிமம் அதிகம் இருக்கும்.

காரல் மீனின் வாழ்விடம்

கடற்பாசிகளை மட்டும் உணவாக உட்கொண்டு வாழும் மீன்களில் பெருங்கூட்டமாக வாழ்பவவை காரல் மீன்களாகும். இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பசிபிக் கடலின் பிஜி தீவுகள் வரை இவை காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் வரை இவை நீந்தித் திரிகின்றன. இவை ஆண்டின் அனைத்து நாட்களிலும் கரைப்பகுதி மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வலைவீசி பிடிக்கப்படும் மீனாகும். சிறிய வகை காரல் மீன்கள் கரைப்பகுதிகளிலும் பெரிய வகை காரல் மீன்கள் ஆழ்கடல் பகுதிகளிலும் அதிகமாக காணப்படும்.

தாய்ப்பால் சுரக்க காரல் மீன்

காரல் மீன்கள் தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்வது என்று தடுமாறும் தாய்மார்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கடற்பாசிகளை அதிகம் உண்டு வாழும் காரணத்தினால் காரல் மீன்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அதிகரித்துள்ளது. தாய்மார்களுக்கு கொடுக்க சிறிய அளவிலான காரல் மீன்களைத்தான் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் சதைப்பற்றுள்ள பெரிய அளவிலான காரல் மீனில் கொழுப்புச்சத்து அதிகமென்பதால் சிறிய அளவிளான காரல் மீன்களை சேர்த்துக்கொள்வதே தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது.

காரல் மீனை உண்ணும் முறைகள்

தாய்ப்பால் அதிகரிக்க காரல் மீனை பின்வரும் உணவுகளாக உண்ணலாம்.

  • காரல் மீன் குழம்பு
  • காரல் மீன் அவியல்
  • அளவில் பெரிய காரல் மீன்களை பொறித்தும் சாப்பிடலாம்.

 

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.