குடிமிளகு மீன் குழம்பு

குடிமிளகு மீன் குழம்பு

குடிமிளகு மீன் குழம்பு அறிமுகம்

குடிமிளகு மீன் குழம்பென்பது சில மூலிகை பொருட்களை கொண்டு புதிதாக குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு முதல் 41 நாட்கள் வைத்துக்கொடுக்கும் மீன் குழம்பாகும். இந்த மீன் குழம்பினை தாய்மார்கள் சாப்பிடுவதன் மூலமாக தாய்மார்களுக்கும், தாய்ப்பாலின் வழியாக குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். மேலும் தாய்ப்பால் அதிகரிக்கவும் இந்த குடிமிளகு மீன் குழம்பு உறுதுணையாக இருக்கும்.

மீன்கள் அதிகம் கிடைக்காத ஊர்களில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த குடிமிளகு குழம்பு சுண்டுவார செலவு இரசம் என்ற பெயரில் முதல் 30 நாட்களுக்கு இரசமாக வைத்துக்கொடுக்கப்படுகிறது.

எந்தெந்த கடல் மீன்கள் கொண்டு குடிமிளகு குழம்பு வைக்கலாம்

குடிமிளகு மீன் குழம்பு வைக்க முட்டி, நகரை, சங்கரா, நாகேஷ், திருக்கை, பால்சுரா, வாவல், காலா, வஞ்சரம் மற்றும் விளை மீன் என இவையனைத்தும் சிறந்தவையாகும். அனைத்து கடல் மீனிலும் குடிமிளகு குழம்பு வைக்கலாமென்றாலும் இந்த மீன்களை கொண்டு வைக்கப்படும் குழம்பானது அதீத சுவையுடன் இருக்கும் என்பதாலும் தாய்மார்களுக்கு நல்லது என்பதாலும் இந்த மீன்களை பரிந்துரைக்கிறோம்.

குடிமிளகு மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

குடிமிளகு பொடிக்கான பொருட்கள் என்று கடைகளில் கேட்டால் பின்வரும் பொருட்கள் கிடைக்கும். அவை அனைத்தும் காரம் மற்றும் கசப்புத்தன்மை உடையவை என்பதால் உங்கள் தேவைக்கேற்ப ஒவ்வொன்றையும் கூட குறைய எடுத்துக்கொள்ளுங்கள், கண்டிப்பாக அனைத்தையும் சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குழம்பில் மிளகாய் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது.

  • கடல் மீன் – 1 கிலோ
  • விரலி மஞ்சள் – 1 முழு மஞ்சள்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • ஓமம் – 2 தேக்கரண்டி
  • திப்பிலி – 10 எண்ணம்
  • குருமிளகு – 25 எண்ணம்
  • வால் மிளகு – 25 எண்ணம்
  • நறுக்கு மூலம் – 5 எண்ணம்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • சுக்கு – 4 எண்ணம்
  • பூண்டு – நல்ல பெரிய அளவு பூண்டு 4
  • பெருங்காயம் – 1 துண்டு
  • உப்பு – தேவைக்கேற்ப

குடிமிளகு மீன் குழம்பு செய்முறை

பூண்டு, பெருங்காயம் மற்றும் உப்பு இவற்றை தவிர்த்து மற்ற அனைத்தையும் நன்றாக இடித்து சிறுசிறு துண்டுகள் கூட இல்லாமல் மிருதுவாக பொடியாக்கிக் கொள்ளவும். சிலர் பெருங்காயத்தையும் சேர்த்து இடிப்பது வழக்கம், ஆனால் குழம்பு வைக்கும் பொழுது பெருங்காயத்தை வெட்டிப்போட்டு வைக்கும் குழம்பு சுவையாக இருக்குமென்பதால் இடிக்க வேண்டாம்.

இடித்து வைத்த பொடியை நன்றாக தண்ணீர் சேர்த்து கரைக்கவும். தண்ணீரின் அளவு எந்தளளவு என்பதை எவ்வளவு நேரம் குழம்பை சுண்ட வைக்க போகிறோம் என்பதை பொருத்து முடிவு செய்ய வேண்டும். அதிகமான தண்ணீரை சேர்த்து சற்று கூடுதல் நேரம் சுண்ட வைத்து குழம்பு வைத்தால் மீன் குழம்பு நன்றாக இருக்கும்.

குடிமிளகு குழம்பினை மண்சட்டியில் வைப்பது சிறப்பாக இருக்கும், மண்சட்டி இல்லாதவர்கள் அலுமினியம் இல்லாத பாத்திரத்தை பயன்படுத்துங்கள். தண்ணீர் விட்டு கரைத்த குடிமிளகு கரைசலை அடுப்பில் வைத்து நன்றாக கொதித்த பின் சுத்தம் செய்து வைத்துள்ள கடல் மீனை சேர்க்கவும். மிதமான சூட்டில் அடுப்பை வைத்துவிட்டு, வெட்டிய பெருங்காயத்தை சேர்த்து ஐந்து நிமையம் கழித்து பூண்டு மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை நன்றாக குறைத்து குழம்பை சுண்ட விடவும்.

குழம்பை எக்காரணம் கொண்டும் கலக்க கூடாது மற்றும் குழம்பு கெட்டியாகிப்போகும் வரை சுண்ட வைத்து விடவும் கூடாது. ஓரளவு சுண்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி அரைமணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.

பிறகென்ன சுவையான மற்றும் உடல் நலனிற்கு ஏற்ற குடிமிளகு மீன் குழம்பையும் மட்ட அரிசி சாப்பட்டையும் ஒரு வெட்டு வெட்டலாம்.

 

 

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.

கல்வி என்றால் என்ன
கல்வி

கல்வி என்றால் என்ன?

கல்வி எனும் சொல்லை இரண்டாக பிரித்தால் கல்+வி  எனப்பிரிக்கலாம். “இளமையில் கல்” என்றொரு பழமொழியை நாம் கேட்டிருப்போம் இந்தப் பழமொழியில் வரும் கல் என்பது கல்வியை குறிக்கிறது. ஆனால் கல் எனும் சொல் நகரும் தன்மையற்ற பொருளையும் குறிக்கும்.