Grey Mullet Fish மடவை

மடவை மீன் – Grey Mullet Fish

மடவை மீனின் பெயர்கள்

மடவை மீன் தமிழகத்தில் மடவை (Madavai), மடவா, சிறையான் , மலையாளத்தில் திருதா (thirutha fish),  ஆங்கிலத்தில் mullet fish மற்றும் grey mullet என்றும் அழைக்கப்படுகிறது.

மடவை மீனின் சிறப்புகள்

பல்லாயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றோடு ஒட்டி உறவாடும் மீன் இனம் இது. கயல், கெண்டை என்ற பெயர்களோடு பாண்டியரின் கொடியில் இடம் பெற்ற பெருமை மிகு மீன் இதுதான். மங்கையரின் விழிகளை மீன்களுக்கு ஒப்பிடுவார்களே, அப்படி கயல்விழி என அழைக்கப்பட காரணமான மீனும் மடவை மீன் தான். வெள்ளிபோல் மின்னும் தன்மையுள்ள மீன் என்பதால் இத்தகைய சிறப்புகளை பெற்றுள்ளது. மடவை கடலோர மிதவெப்ப மற்றும் வெப்பவலயப் பகுதியில் வாழும் மீன் குடும்பம் ஆகும். இவற்றில் சில இனங்கள் நன்னீரிலும் வாழ்கின்றன.

மடவை அடிக்கடி துள்ளிக்குதிக்கும் மீன், கடலின் மேல் மட்டத்தில் மூன்றடி உயரத்துக்கு இவை துள்ளிவிழும். உடலை விறைப்பாக வைத்து பொத்தென்று இது கடலில் விழும். கடலில் மடவை துள்ளுவதை வைத்து அதன் கூட்டம் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுகொள்ளலாம். வேட்டை மீன்கள் துரத்தும் பொழுது அவற்றிடம் இருந்து தப்பிக்கவும், உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை கழற்றிவிடவும், அதிக உயிர்க்காற்றைத் தேடியும் மற்றும் முட்டையீனும் காலத்தில் முட்டைப்பையைத் திறக்கவும் மடவை கடலின் மேற்பரப்பில் துள்ளுகிறது. மடவை மீன் குடும்பத்தில் 20 பேரினங்களாக மொத்தம் 78 இனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மடவை மீனின் உடலமைப்பு

மடவை மீனுக்கு பறவைகளுக்கு இருப்பது போல குடலில் அரைவைப் பை உண்டு. அதன்மூலம் உணவை இது அரைக்கக் கூடியது. செரிக்காத உணவை வெளியே துப்பும் பழக்கமும் மடவைக்கு உண்டு. மடவைகளின் தனித்தன்மையாக இரண்டு பெரிய முதுகுத் துடுப்பையும், சிறிய முக்கோண வடிவ வாயையும், முதுகுப் பகுதியில் ஒரே மாதிரியான கோடுகளையும் கூறலாம். மடவை மீன்கள் உடலின் இருபுறமும் வெள்ளி நிறத்துடனும், முதுகில் பச்சை நிறத்துடனும் மிளிரும். நீலம் கலந்த சாம்பல் நிற மடவையும் உண்டு. மடவையின் அடிவயிறு மற்ற மீன்களுக்கு இருப்பதைப் போலவே பால் வெள்ளை நிறமாக இருக்கும். மடவை அதிக சதை பற்றோடு உள்ள பொழுதும் வேகமாக நீந்தக்கூடியது.

முதல் முதுகுத்தூவியில் விறைப்பான 4 முட்கள் இருப்பது இந்த மீனின் தனித்த அடையாளம். தட்டையான தலை, வட்ட செதிள்கள், மழுங்கலான மூக்கு, கவை வால், சிறிய முக்கோண வடிவ வாய் போன்றவை பிற அடையாளங்களாகும். மடவை மீனின் தாடையில் வலுவற்ற சிறிய பற்கள் இருக்கும். சிலவகை மடவைகளுக்கு பற்களே கிடையாது. மடவைகள் ஓரடி நீளம் முதல் 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை .பொதுவாக பாசிகள், சிறிய கடலுயிர்கள் தான் இதன் உணவு. மண்டியைக் கிளறி இவை இரை தேடும்.

மடவை மீனை உண்ணும் முறை

நடுநிலக்கடல் (மத்தியத்தரைக்கடல்) பகுதியில் ரோமானியர்களுக்கு உணவு ஆதாரம் மடவை மீன்கள் தான்  என்றால் அது மிகையாகாது. மடவை மீன்கள் உண்ண சுவையான மீன்களாகும். மடவை மீன் குழம்பும் மடவை மீன் வறுவலும் சுவையானதாகும். சதைப்பகுதியிலும் முட்கள் இருப்பதனால் இந்த மீனை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது கவனம் தேவை.

 

 

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.

கல்வி என்றால் என்ன
கல்வி

கல்வி என்றால் என்ன?

கல்வி எனும் சொல்லை இரண்டாக பிரித்தால் கல்+வி  எனப்பிரிக்கலாம். “இளமையில் கல்” என்றொரு பழமொழியை நாம் கேட்டிருப்போம் இந்தப் பழமொழியில் வரும் கல் என்பது கல்வியை குறிக்கிறது. ஆனால் கல் எனும் சொல் நகரும் தன்மையற்ற பொருளையும் குறிக்கும்.