மடவை மீன் தமிழகத்தில் மடவை (Madavai), மடவா, சிறையான் , மலையாளத்தில் திருதா (thirutha fish), ஆங்கிலத்தில் mullet fish மற்றும் grey mullet என்றும் அழைக்கப்படுகிறது.
நெத்திலி மீன்களை தமிழகத்தில் நெத்திலி (Nethili fish), ஈழத்தில் நெத்தலி மற்றும் நெய்தோலி, ஆங்கிலத்தில் Anchovy / Anchovies, மலையாளத்தில் நெத்தோலி மற்றும் கொழுவா, தெலுங்கில் நெத்தலு மற்றும் பொறவலு, கன்னடத்தில் நெத்தல் மற்றும் பொலிங்க கொளத்தாறு, மராத்தியில் கடி என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.
சாளை, மத்தி (Mathi meen) மற்றும் மொந்தன் என்ற பெயர்களில் தமிழில் அழைக்கப்படும் மீனானது ஆங்கிலத்தில் Sardine fish மற்றும் Pilchard என்று அழைக்கப்படுகிறது. இந்த மீன்கள் மலையாளத்திலும் சாளை மற்றும் மத்தி என்றே அழைக்கப்படுகிறது. தெலுங்கில் காவாலு (kavalu fish) என்றும் , பெங்காலியில் கொய்ரா (khoira fish) என்றும் அழைக்கப்படுகிறது.
காரல் என பொதுவாக அழைக்கப்படும் இந்த மீன் வகையானது உருவத்தில் மிகச் சிறியதாக உள்ளதால் பொடி மீன் மற்றும் காரப்பொடி மீன் என்றும் அழைக்கப்படுகிறது. சிலர் பூச்சி மீன் என்றும் அழைப்பதுண்டு. மலையாள நாட்டில் இதை முள்ளான் எனவும் ஆங்கிலத்தில் \"Pony fish\" எனவும் அழைக்கப்படுகின்றது. முகம் மட்டக்குதிரையின் (Pony) முகம் போல் இருப்பதால் அவ்வாறு பெயர் வழங்கப்பட்டுள்ளது. சிலர் இதை Silver belly fish என்றும் அழைப்பதுண்டு.