கணையாளி என்றால் என்ன?

கணை எனும் சொல் இரண்டு பொருள் தரும். கணை என்பது அம்பு எனும் பொருளையும் கணையம் என்ற உடல் உறுப்பையும் குறிக்கும். ஆளி எனும் சொல் ஆளுமையுள்ள ஒருவரை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.

வானில் ஏவப்படும் ஏவுகணை முதல் சிறு அம்பு வரை அனைத்திலும் பின்பக்கம் சில இறகுகளை ஒட்டி இருப்பார்கள். அந்த இறகுகளின் வேலை, வில்லிலிருந்து வெளியேறிய அம்பு அதாவது கணை காற்றின் வேகத்தில் திசைமாறிவிடாமல் இலக்கை நோக்கி பயணிக்க உதவியாக இருப்பதாகும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் வில்லில் இருந்து வெளியேறிய கணையை ஆளக்கூடியது அந்த இறகுகள் தான். அப்படி கணையை ஆளும் இறகுகளின் பெயர் கணையாளியாகும்.