fbpx

Vaikkal Karaiyoram – Book

Vaikkal Karaiyoram – Book

0 out of 5 based on 0 customer rating(s)

 200.00

வாய்க்கால் கரையோரம்

பல சிறப்பியல்புகளைக் கொண்ட தமிழ் ஈழத்தின், சம கால வரலாற்றுப் பெட்டகம்.

In stock

Compare
SKU: vaaikal_karaiyoram Category:

Description

வாய்க்கால் கரையோரம்
********************************
நாவல்.
******
போராட்டக் களத்தில் நான் நின்றபோது எழுத தொடங்கிய ஈழத்தின் உண்மை வரலாற்று நாவல்!
**********************
மு.வே.யோகேஸ்வரன்
****************************

இந்த நாவலின் நாயகி சிவந்தி, நாயகன் செல்வம்..
இவர்கள் ஒரு காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பண் குளம் என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர்களே அவர்களின் இனிய காதல் எப்படி வளர்ந்தது? அந்தக் காதலுக்கு இடையூறாக வந்த சிங்கள இன அழிப்புப் படைகள் புரிந்த அக்கிரமங்கள், அடிக்கடி சொந்த மண்ணில் ஏதிலிகளாகிய பண் குளம் கிராமத்து தமிழ் மக்கள், சிங்கள இன வாதப் பூதங்களால் அடிக்கடி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட அந்தக் கிராமத்துப் பெண்கள் என இவைகளுக்கு நடுவே, பனி மலர்கள் நெல் வயல்களுக்கு இடையில் பூத்துக் கிடப்பதுபோல், மலர்ந்த செல்வம் – சிவந்தி காதல் கதையே வாய்க்கால் கரையோரம் ஆகும்..

300 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் மிகச் சிறந்த தாள்களால் அச்சிடப் பட்டவை. முன்-பின் அட்டைப் படங்களுக்கு உரிய அழகான, தடிப்பான மட்டைகள் இந்த நாவலுக்கு பாதுகாவலாக பல நூற்றாண்டுகள் இருக்க கூடியவை.

நாவலுக்கு உள்ளே நுழைந்தால், ஒன்பது கண்கவர் படங்கள் இருப்பதை நீங்கள் காணலாம். ஒவ்வொன்றும் எங்கள் மண்ணின் வரலாற்றுப் படங்கள்தான். பின் அட்டையில் உள்ள படம் வரையப் பட்டது அல்ல. நடந்த உண்மை. அதைச் சுற்றியே கதை நடந்து கொண்டிருக்கிறது. இப்படி அநேக சிறப்பியல்புகளைக் கொண்ட தமிழ் ஈழத்தின் வரலாற்றுப் பெட்டகம்தான் “வாய்க்கால் கரையோரம்” நாவல் ஆகும்.