fbpx

தற்காலத்தில் கல்விமுறை, இயற்கை சூழல், பொருளியல் நிலை மற்றும் வேலை வாய்ப்பு குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். இந்த உலகத்தின் அடித்தளமான கல்வி, மண் வளம், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது கணையாளி குழு.

எந்த ஒரு மாற்றத்தையும் குழந்தைகளின் கல்வி வழியாக எடுத்துச்செல்வதே சிறந்தது என்பதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது கணையாளி. மேலும் சிறப்பு நிகழ்வுகளின் வழியாக ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடையேயும் விழிப்புணர்வு வழங்கிவருகிறது.

குழந்தை வளர்ப்பில் செயல்முறை கல்வியின் வழியாக குழந்தைகளின் தனித்திறனை கண்டறிந்து மேம்படுத்துவது குறித்து பல வல்லுநர்களின் கருத்துகளை உள்வாங்கி கணையாளி குழு தொகுத்துள்ளது.

அனைத்து தொகுப்புகளையும் கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WhatsApp chat