நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும். நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கு பயமும் பதற்றமும் இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நம் முன்னோர் உருவாக்கிய கல்வி முறை தான் இம்முறை.

எடுத்துக்காட்டாக;
கழுத்து நிறைய நகைகளுடன் ஒரு பெண் தெருவில் நடந்து செல்லும் பொழுது நான்கைந்து திருடர்கள் சுற்றி வளைத்துவிட்டாலோ அல்லது நாம் வீட்டிலிருக்கும் பொழுது திருடனொருவன் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டுமென குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நம் முன்னோர் பயிற்சி முறையை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால் நாம் அப்பயிற்சியின் உண்மையான நோக்கத்தை அறிந்துகொள்ளாமல் உள்ளோம்.

கபடி விளையாட்டு

உடல் வலிமைக்காக விளையாடுவதாக நினைத்துக்கொண்டிருக்கும் கபடி விளையாட்டு தான் உலகின் தலைசிறந்த தற்காப்பு முறைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நாடகக் கல்வி முறையாகும்.

கழுத்து நிறைய நகைகளுடன் ஒரு பெண் தெருவில் நடந்து செல்லும் பொழுது நான்கைந்து திருடர்கள் சுற்றி வளைத்துவிட்டால் என்ன செய்வது?

கபடி விளையாட்டில் எட்டு வீரர்கள் சுற்றி நிற்க எல்லைக்கோட்டை தொட்டு விட்டு அவர்களிடம் பிடிபடாமல் திரும்பிவரும் பயிற்சி பெற்ற பெண்ணாக இருந்தால், என்ன செய்வார்? பயம் பதற்றமிருந்தாலும் அந்த பயத்தை வெளிக்காட்டாமல் தப்பிவிட இந்த விளையாட்டு மிகவும் உதவியாக இருக்குமல்லவா?

அடுத்து, நாம் வீட்டிலிருக்கும் பொழுது திருடனொருவன் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து விட்டால் என்ன செய்வது? ஒரு அணியில் உள்ள எட்டு வீரர்களை குடும்பத்தை சேர்ந்தவர்காளகவும் கபடி கபடி என பாடிவரும் வீரனை திருடனாகவும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.

யாரேனுமொரு வீரன் தொடப்பட்டுவிட்டால், தொடப்பட்ட வீரன் கபடி பாடி வந்தவரை வெளியேற்ற வேண்டுமென்பது விளையாட்டு முறை. வீட்டில் உள்ள யார் மீதாவது கத்தி பட்டு அவர் காயமானால் அவர் தன் உயிரை பொருட்படுத்தாது மற்றவர்கள் உயிரை காக்க திருடனை வீட்டை விட்டு வெளியே தள்ள வேண்டும் அல்லது அவனது கை கால்களை பிடித்து கட்டி வைக்க வேண்டுமென்ற அடிப்படை உளத்தியல் இங்கு மிக அழகாக கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறு கபடி எனும் நாடகம் அதாவது விளையாட்டின் மூலமாக குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க முடியும்.

தனித்திறமையை கண்டறியும் முறை

விளையாட்டின் பொழுது யாரெல்லாம் சிறப்பாக செயல்படுகின்றனர்? யாருடைய செயல்பாடு மோசமாக உள்ளது? என்பனவற்றை கண்டறிந்து சிறப்பு பயிற்சி கொடுக்கவும், ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையை கண்டறியவும் இத்தகைய நாடகக் (விளையாட்டு) கல்வி முறை பெரிதும் பயன்படும்.

இந்த இடத்தில் சிலம்பம், குங்பூ, கராத்தே, களரி இப்படி ஏதாவதொரு கலையை கற்றுக் கொடுக்கலாமே அதுவும் தற்காப்பு கலை தானே என சிலர் நினைக்கலாம். ஆனால் இதில் எதுவுமே தற்காப்பு கலையில்லை, அனைத்துமே போர்க்கலை. எதிரியை தாக்கும் எந்தவொரு கலையும் போர்க்கலையாகும். ஒரு குழந்தை போர்க்கலையை கற்றுக்கொள்ளுமளவு மனபக்குவம் பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளாமல் அதை கற்றுக்கொடுப்பது எதிர்காலத்தில் மிகப்பெரும் சிக்கலை உருவாக்கிவிடும். போர்க்கலைகள் என்று மட்டுமில்லை எந்த பயிற்சியாக இருந்தாலும் படிப்படியாக மெல்ல மெல்ல கற்பிக்க வேண்டுமே தவிர நேரடியாக கற்பிக்கக்கூடாது. அந்த அடிப்படையில் நேரடியாக கபடி விளையாட்டை கற்றுக்கொடுக்கலாமா என்று ஆய்வு செய்தால், நேரடியாக கற்றுக்கொடுக்க கூடாது என்பதே உண்மை. கபடி விளையாட்டிற்கும் படிநிலைகள் உள்ளது.

விளையாட்டின் படிநிலைகள்

1. கபடி விளையாடும் பொழுது கால்களை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருக்காமல் குதித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு கயிறாட்டப்பயிற்சி (Skipping) தேவை.

2. நான்கைந்து பேர் பிடித்து இழுக்கும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துவிடக்கூடாது. அதற்கு கயிறு இழுக்கும் விளையாட்டுப்பயிற்சி தேவை.

3. கையைப்பிடித்து சுற்றி வீசிட வாய்ப்பு உள்ளது. அதில் கீழே விழுந்துவிடாமல் இருக்க உந்திப்பற விளையாடி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

4. எதிரணியில் உள்ளவர்கள் நம் மீது விழுந்த பின்பும் எழுந்து நடக்குமளவு வலிமை பெற்றிருக்க வேண்டும். அதற்கு உப்பு மூட்டை விளையாட்டுப் பயிற்சி தேவை.

5. நம்மை வழி மறித்து தடுப்பவர்களை தாண்டிச்செல்லும் திறன் நமக்கு இருக்க வேண்டும். அதற்கு பச்சைக்குதிரை விளையாட்டு விளையாடியிருக்க வேண்டும்.

இப்படி கபடி என்ற தற்காப்பு விளையாட்டை விளையாட தொடங்குவதற்கு முன்பு கயிறாட்டம், கயிறு இழுத்தல், உந்திப்பற, உப்பு மூட்டை மற்றும் பச்சைக்குதிரை போன்ற விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்பித்து விளையாட வைக்க வேண்டும். அப்பொழுது தான் கபடி விளையாடும் பொழது எந்த சிக்கலும் இருக்காது. இங்கு குறிப்பிட்ட கபடி விளையாட்டு தற்காப்பு துறை சார்ந்த தலை விளையாட்டாகும். கயிறாட்டம், கயிறு இழுத்தல், உந்திப்பற, உப்பு மூட்டை மற்றும் பச்சைக்குதிரை போன்றவை துணை விளையாட்டுகளாகும்.

தற்காப்பை போல் கணிதம், புலனாய்வு, காவல், வேளாண்மை, போக்குவரத்து மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகள் உள்ளது. அனைத்து துறைகளுக்கும் தலை விளையாட்டும் துணை விளையாட்டுகளும் உள்ளது. ஒவ்வொரு பிரிவாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.